Header Ads

  • BREAKING



    தமிழ் ஆய்வில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு செம்மொழி விருது.


    தமிழ் ஆய்வில் முக்கிய பங்காற்றிய 18 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செம்மொழி விருதுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
    இலக்கணம், இலக்கியம், வரலாறு, கட்டடவியல் உள்ளிட்ட பல துறைகள் சார்ந்து ஆய்வு நிகழ்த்திய 18 பேர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரையில் விருது பெறும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, முனைவர்கள், கந்தசாமி, தட்சிணாமூர்த்தி, கலைக்கோவன் ஆகியோருக்கு தொல்காப்பியர் விருது வழங்கப்பட்டது. முனைவர்கள், பாலசுப்பிரமணியம், செழியன், சதீஷ், முத்துச்செல்வன், வனிதா, பாலாஜி, பிரகாஷ், ராஜலட்சுமி உள்ளிட்ட 15 பேருக்கு இளம் அறிஞர் விருது வழங்கப்பட்டது. 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தொல்காப்பியர் விருதும், 1 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் இளம் அறிஞர் விருதும் வழங்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad