தமிழ் மொழி கற்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்.
தமிழ் மொழி கற்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துமாறு தமிழக அரசை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்கும் அரசாணை முறைப்படி செயல்படுத்தப்படவில்லை என்றும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகள் மற்றும் விதிமுறைகள் இல்லை என்றும் கூறியுள்ள அவர், தமிழ் மொழி கற்கும் சட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் அ.தி.மு.க. அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நேரத்தில் தமிழை மாணவர்கள் கற்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ள அவர், அரசுப் பள்ளிகளில் போதிய தமிழாசிரியர்களை நியமிக்கவும், தமிழின் தொன்மையையும், வளத்தையும் இளைய சமுதாயத்தினர் அறியச்செய்யும் ஆக்கபூர்வ முயற்சிகளில் ஈடுபடவும் தமிழகஅரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை