Header Ads

  • BREAKING



    மது அருந்தியவர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு ஆத்திரமடைந்த உறவினர்கள்,பொதுமக்கள் சாலைமறியல்.


    தஞ்சை அருகில் மது குடித்தவர் சில மணி நேரத்திற்குள்ளே உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அந்த கடையை இழுத்து மூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் புணல்குளத்தை சேர்ந்த பொன்னுசாமி, தஞ்சை அருகில் உள்ள திருக்கானூர்பட்டி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்த சில மணி நேரத்தில் உயிர் இழந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடையை அகற்றக்கோரி, ஒரத்தநாடு, வல்லம் இடையிலான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடை அகற்றப்படும் என்று உத்திரவாதம் அளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad