Header Ads

  • BREAKING



    மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம்- வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பு.


    தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யம்பேட்டை முல்லை நகரில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, சாலைமறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதால், பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முல்லைநகர் மற்றும் ராயல் நகரில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளைகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad