Header Ads

  • BREAKING



    நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர்கள்.


    தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் அவலம் நடைபெற்று வருகிறது. தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சை மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்கு, அங்குள்ள துப்புரவு பணியாளர்கள் நரம்பு வழியே குளுக்கோஸ் ஏற்றியும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு செங்கற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதேபோன்று துப்புரவு பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad