Header Ads

  • BREAKING



    இடம் மாற்றி மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை: சென்னை உயர்நீதிமன்றம்.


    தமிழகத்தில் இடம் மாற்றி மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 500 மீட்டருக்குள் செயல்படும் மதுபான கடைகளை மார்ச் 31க்குள் மூட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அகற்றப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகளை மாநகராட்சி சாலைகளாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    இந்நிலையில் தமிழகத்தில் அரியலூர் வாரணவாசி, சேலம் ஆத்தூர் எடப்பாடி உள்ளிட்ட 10 இடங்களில் இடம் மாற்றி மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தபோது இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad