Header Ads

  • BREAKING



    குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைக்க வலுக்கிறது எதிர்ப்பு.


    குடியிருப்புப் பகுதிகளிலும், விளைநிலங்களிலும் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுபாட்டில்களை உடைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட மதுக்கடையை மூட மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண்கள் அக்கடை மீது கற்களை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தூத்துக்குடி ஜார்ஜ் நகரில் அரசு விதிமுறைகளை மீறி புதிதாக டாஸ்மாக் கடை செயல்படுவதாக கடந்த சில நாட்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று திடீரென்று அந்த கடை முன்பு திரண்ட ஏராளமான பெண்கள் கடையை மூடக்கோரி முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கடை மூடப்படாததால் ஆத்திரமடைந்த பெண்கள் கீழே கிடந்த கற்களை எடுத்து கடையில் வீசினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் இன்னும் 3 நாட்களுக்கு கடை திறக்கப்படாது என்றும் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
    கோவில்பட்டி அருகே புளிங்குளம் கிராமத்தில் அரசு கட்டி கொடுத்த காலனி வீடு ஒன்றில் நேற்றிரவு மதுக்கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிகும் பெண்கள் ஆத்திரத்துடன் அந்த வீட்டிற்குள் இறக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினர்.இதுபற்றி தகவல் அறிந்த தும் காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்து மதுபாட்டில்கள் வேன் மூலம் எடுத்து செல்லப்பட்டதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad