அலையா அலையுறாங்களாம் மதுப்பிரியர்கள்... கடையை திறக்கக்கோரி போராட்டம்.
ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேளுக்குறிச்சி அருகே இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அந்தக்கடையை பள்ளப்பட்டி கிராமம் அருகே திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடையை மீண்டும் திறக்கக்கோரி பேளுக்குறிச்சி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு மக்கள் போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் கடை இல்லாததால் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளதாகவும், கூலி வேலை செய்த பிறகு உடல் வலியால் தூங்க முடியவில்லை எனவும் அவர்கள் கூறினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை