மதுபாட்டில்களை உடைத்து, டாஸ்மாக் கடையை சூறையாடிய பொதுமக்கள்.
கழனிப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள், பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மதுக்கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று நண்பகலில் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சிலர் சம்மட்டியால் டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டு மற்றும் சுவரை உடைத்து கடைக்குள் புகுந்து, மதுபாட்டில்களை வெளியில் வீசி சூறையாடினர்.
கருத்துகள் இல்லை