மதுபாட்டில்களை உடைத்து, டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்.
திண்டுக்கல் – கரூர் நெடுஞ்சாலையில் உள்ள தாடிக்கொம்புவில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள், பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மதுக்கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், மதுக்கடைக்குள் புகுந்து, மதுபாட்டில்களை வெளியில் வீசியெறிந்து உடைத்தனர். மேலும் ஆத்திரம் குறையாத மக்கள், மதுபாட்டில்களை கட்டையால் அடித்து நொறுக்கினர்.
மதுபாட்டில்களை உடைத்த 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, சிலர் கரூர் திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை