Header Ads

  • BREAKING



    ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டன: அருண் ஜெட்லி.


    மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம் ஸ்ரீநகரில் நடந்தது. இதில் 80 முதல் 90 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. 

    5,12,18 மற்றும் 28 சதவீதம் என நான்கு வகையான வரி விகிதங்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டன. இதில் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 5சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    தற்போதைய வரிவிகித நிலையிலே வரி விகிதங்கள் இருக்கும் என தெரிகிறது. இருந்தாலும் முழுமையான வரிவிகிதங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிகிறது.
    முன்னாதாக ஜிஎஸ்டி வரம்புக்குள் தங்கத்துக்கு ஒருசதவீத வரி விதித்தால் போதுமானது என்னும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், தங்கம் அடிப்படை தேவையில்லை, அதனால் தங்கத்துக்கு 5 சதவீத வரி விதிக்க வேண்டும் என கேரள நிதிஅமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்தார்.
    பூஜை பொருள்களுக்கு 18 சதவீதம் என பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் உத்தரபிரதேசம் இதற்கு வரி விதிக்ககூடாது என கோரிக்கை வைத்திருக்கிறது. சில மாநிலங்கள் இரு வகையாக சேவைவரி (12 மற்றும் 18%) விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
    சரக்கு மற்றும் சேவை வரியை முதன் முதலாக பிரான்ஸ் 1954-ம் ஆண்டு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தன. ரஷ்யா 1991-ம் ஆண்டிலும், சீனா 1994-ம் ஆண்டிலும் அறிமுகம் செய்தது. சவுதி அரேபியா 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad