Header Ads

  • BREAKING



    மென்பொருள் ஊழியர்களின் நிலை மேலும் சிக்கலாகிறது.


    விப்ரோ, காக்னிசண்ட் நிறுவனங்களை தொடர்ந்து டெக் மகிந்திரா மற்றும் இன்போசிஸ் ஆகியவை ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் இன்போசிஸ் மூன்றாவது இடத்திலும், டெக் மகிந்திரா ஐந்தாவது இடத்திலும் உள்ளது. மென்பொருள் நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஊழியர்களின் செயலாக்கத் திறனை மதிப்பீடு செய்து அதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்களை பணியில் இருந்து நீக்குவது வழக்கம். அந்த வகையில் டெக் மகிந்திரா நிறுவனம் இம்மாதத்துடன் ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதே நடவடிக்கையின் பேரில் இன்போசிஸ் நிறுவனமும் பல மூத்த அதிகாரிகள் உள்பட நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad