150 தற்காலிக ஓட்டுனர்கள் -நடத்துநர்கள் நியமனம்:அமைச்சர் துரைக்கண்ணு.
பேருந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப 150 தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மேலும் 300 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்னாளில் அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.பேருந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப தமிழக அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக துரைக்கண்ணு மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை