Header Ads

  • BREAKING



    சென்னை திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை நாளை மறுநாள் முதல் தொடக்கம்.



    திருமங்கலத்தில் தொடங்கி, அண்ணா நகர் கோபுரம், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பா கல்லூரி, கீழ் பாக்கம், வழியாக நேரு பூங்காவை அடையும் இந்த மெட்ரோ ரயில் சேவை மொத்தம் 7 நிலையங்களை இணைக்கிறது. சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவிலான இந்த தூரம், முழுக்க முழுக்க சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சுரங்கப் பாதையில் சென்னையில் ரயில் இயக்கப்பட உள்ளது.
    இந்த சுரங்க ரயில் பயணத்துக்கு 40 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. நாளை மறுநாள் ஞாயிறு முதல் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளது. துவக்க விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடு, பொன்ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad