Header Ads

  • BREAKING



    லஞ்சம் பெற முயன்ற அந்த அதிகாரி யார்? திருமாவளவன் கேள்வி.


    டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்றால், அதனைப் பெறத் தயாராக இருந்த அதிகாரி யார் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வினவியுள்ளார்.
    அரியலூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘டிடிவி.தினகரன் பெயர் எப்ஐஆரில் இல்லை, ஆனாலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறர்கள். தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பது குற்றச்சாட்டு. அதனை வாங்கத் தயாராக இருந்த தேர்தல் ஆணைய அதிகாரி யார்? தினகரன் தவறு செய்தால் அது தமிழகத்துடன் போய்விடும். தேர்தல் ஆணைய அதிகாரி தவறு செய்தால் அது நாட்டுக்கே பெரும் தீங்கு. லஞ்சம் பெற தயாராக இருந்த அதிகாரி யார் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். தினகரனை நியாயப்படுத்த கேள்வி எழுப்பவில்லை’ என அவர் தெரிவித்தார்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad