Header Ads

  • BREAKING



    திருவாரூர்:அரசு மதுபானக் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரியிலிருந்து நாட்டு வெடிகுண்டு பறிமுதல்.


    திருவாரூர் அருகே மதுபானக் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரியிலிருந்து, நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தியை போலீஸார் பறிமுதல் செய்தனர். திருவாரூர் விளமல் அரசு மதுபானக் கிடங்கில் மதுபாட்டில்கள் அடங்கிய யுனிவர்செல் நிறுவன லாரியை, ஓட்டுநர் மோகன் என்பவர் கடந்த 27-ஆம் தேதி நிறுத்தியிருக்கிறார். இந்நிலையில், யுனிவர்செல் நிறுவனத்தின் மற்றொரு லாரி ஓட்டுநரான ரமேஷ் என்பவர், கஞ்சா வழக்கு தொடர்பாக கடந்த 29-ஆம் தேதி சென்னை எண்ணூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைதான ரமேஷ், திருவாரூரில் நிறுத்தப்பட்டுள்ள லாரி உட்பட 3 லாரிகளில், நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, எண்ணூர் போலீஸார் அங்கு விரைந்து லாரியில் சோதனை மேற்கொண்டு, நாட்டு வெடிகுண்டு ஒன்றையும், கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மற்ற இரண்டு லாரிகள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்ற லாரி ஓட்டுநர்கள் மோகன், ராஜ் ஆகியோரையும் தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad