வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்து கொலை.
திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த மஞ்சுளா என்பவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத அவரது மகன் சென்னையில் இருந்து புறப்பட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தார்.
வீட்டில் தனது தாயார் மஞ்சுளா, தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நகைக்காக கொலைநடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை