சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகள் திடீர் நிறுத்தம்.
ஊதிய உயர்வு, ஓய்வுதிய நிலுவைக் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். வேலைநிறுத்தத்தை தவிர்ப்பதற்காக தொழிற்சங்கத்தினருடன் அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 7 ஆயிரம் கோடி ரூபாயில் செப்டம்பர் மாதத்திற்குள் ஆயிரத்து 250 கோடி ரூபாயை வழங்க அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்க முடியாது என்றும், அரசாணை வெளியிட வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை