தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழக அரசு பட்ஜெட் ஏற்கனவே சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை அளிப்பது அந்தந்த மாநில அரசுகளின் கையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. எனவே, அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், மின்சாரத் தட்டுப்பாடு, வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, நிலங்களை பதிவு செய்ய நீடிக்கும் தடை ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை