Header Ads

  • BREAKING



    தனியார் மணல் குவாரிகளை 3 ஆண்டுகளில் அரசே ஏற்று நடத்தும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.



    மணல் குவாரிகளை இனிமேல் அரசே ஏற்று நடத்தும் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்து இரண்டு முதல் 3 ஆண்டுகளில் மணல் அள்ளுவது நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மதுரையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,

    ஆரப்பாளையம் மற்றும் திருமலை ராயர் பகுதிகளில் இரண்டு மேம்பாலங்களை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், மணல் குவாரிகளை இனிமேல் அரசே ஏற்று நடத்தும் என்றார். இதன் மூலம் மணல் விலை குறைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். அடுத்த இரண்டு முதல் 3 ஆண்டுகளில் படிப்படியாக மணல் அள்ளுவது நிறுத்தப்படும் என்ற அவர், வரும் காலங்களில் ஆற்று மணலுக்கு பதில் M.sand எனப்படும் மாற்று மணலை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மணல் அள்ளுவதை நிறுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் மட்ட உயர வாய்ப்பு உருவாகும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.நேற்று இரவு சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மணல் குவாரிகளை மூட குவாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அதிமுகவின் இரு அணிகள் இணைவதில் தோல்வி எதுவும் ஏற்படவில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் திறந்த மனதுடன் இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad