Header Ads

  • BREAKING



    தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா ராஜினாமா.


    தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா தன் பதவியை ராஜினாமா செய்தார்.
    தமிழக அரசின் டெல்லி ஆலோசர் பவன்ரெய்னா கடந்த 12-ம் தேதி இவர் ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். தற்போது அந்தக் கடிதம் ஏற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழக அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியுடன் இணைந்து, மத்திய- மாநில அரசுகள் இடையிலான முக்கியமான விஷயங்களை பவன் ரெய்னா கவனித்து வந்தார். சமீபத்தில், இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில், அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பவன்ரெய்னா பெயரும் அடிபட்டது.
    இதையடுத்து டெல்லி போலீஸார் பவன் ரெய்னாவிடம் விசாரித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad