Header Ads

  • BREAKING



    கட்டாய கல்வி – தமிழக அரசு நிலுவைத்தொகை ரூ. 300 கோடி செலுத்தினால் மட்டுமே சேர்க்கை.



    கட்டாய கல்வித் திட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு தர வேண்டிய 300 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, தமிழக அரசு தந்தால் மட்டுமே இந்த கல்வியாண்டில் மாணவர்களை கட்டாய கல்வித் திட்டத்தில் சேர்ப்போம் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி ,மெட்ரிகுலெஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
    அச்சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் கரூர் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் செயலாளர் நந்தகுமார், கட்டாய கல்வித்திட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் 40 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்தார். பள்ளிகளுக்கு தரவேண்டிய 300 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை, தமிழக அரசு செலுத்தினால் மட்டுமே அவர்களை பள்ளியில் சேர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad