Header Ads

  • BREAKING



    மோசடி புகாரில் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யாத தமிழக போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.


    30 லட்சம் ரூபாய் மோசடி புகாரில் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யாத தமிழக போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருவாரூரைச் சேர்ந்த எஸ்.வி.எஸ் குமார் என்பர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், சென்னை சிருங்கேரி மட சாலையில் உள்ள தனது வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை காலி செய்து தர 2011ம் ஆண்டு காமராஜ் 30 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக கூறியிருந்தார். 2011 தேர்தலில் வென்று அமைச்சரான பிறகு காமராஜ் தன்னை சந்திக்க மறுத்ததுடன் 30 லட்சம் ரூபாய் பணத்தையும் தர மறுப்பதாக குமார் தெரிவித்திருந்தார். வீட்டையும் காலி செய்து தராமால், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்தது குறித்து கேள்வி கேட்ட போது தனக்கு அமைச்சர் காமராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குமார் மனுவில் கூறியிருந்தார். அமைச்சர் காமராஜ் மீது 2015ம் ஆண்டு மன்னார்குடி காவல்நிலையத்தில் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தை நாடி அமைச்சருக்கு எதிராக போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்கிற உத்தரவை பெற்றும் பலன் இல்லை என்றும் குமார் கூறியிருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad