Header Ads

  • BREAKING



    புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.


    நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் , அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களுக்கும் புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தியுள்ளார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற புகையிலைக்கு எதிரான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், புகையிலை உபயோகத்துக்கான வயது வரம்பை 18ல் இருந்து 21 ஆக மாற்றுவது குறித்த பரிந்துரை மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்கள், அரசியல் கட்சிகள் புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad