பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம்.
வாகன ஓட்டிகள் தாங்கள் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும், சுங்கக்கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 19 ஆயிரம் கிலோ மீட்டர் தூர நெடுஞ்சாலைகள், கட்டண சாலைகளாக நிர்ணயிக்கப்பட்டு, 362 சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சாலைகளில் பயணிப்போர், குறிப்பிட்ட சில கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயணித்தாலும், நிர்ணயிக்கப்பட்ட முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், சுங்கச்சாவடிகள் இருக்கும் புறவழிச்சாலைகளை தவிர்த்து, இதர சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருவதாக கூறியுள்ள மத்திய அரசு, கட்டண சாலைகளை வாகன ஓட்டிகள் பெரிய அளவில் பயன்படுத்தும் வகையில் கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. தற்போது 96 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமுடைய தேசிய நெடுஞ்சாலைகளை, 2019ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை