தக்காளி விலை வீழ்ச்சியால் அறுவடை செய்ய தயங்கும் விவசாயிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் அவற்றை சாலையில் கொட்டி வேதனையை வெளிப்படுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தேங்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில், 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு வருகின்றனர். உற்பத்தி அதிகரிப்பு, வெளிமாநில தக்காளி வரத்து போன்ற காரணங்களால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பறிக்க ஆகும் கூலிக்கு கூட விலை கிடைக்காததால், சில விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். சிலர் உரத்துக்கும், சிலர் சாலைகளில் கொட்டி அழிக்கும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை