Header Ads

  • சற்று முன்



    நாளை வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு.


    பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் எனவும், தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும், மறுக்கூட்டலுக்கு வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    மொழிப் பாடங்களுக்கு தலா 305 ரூபாயும், விருப்ப மொழிப்பாடம் மற்றும் இதர பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை, மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு பள்ளிகள் மூலமாகவோ, தேர்வு மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad