கண்மூடித்தனமாக தாக்கும் பாரம்பரிய குத்துச்சண்டை.
பொலிவியாவில் கண்மூடித்தனமாக தாக்கும் பாரம்பரிய குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. ஏராளமானோர் திரண்டிருந்த மச்சா நகர மைய சதுக்கத்தில், எண்கவுண்டர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சண்டையில், வீரர் ஒருவர், எதிராளியின் முகத்தில் சரமாரியாக குத்துக்களை விட்டார். நடுவர் முன்னிலையில் நடைபெறும் இந்த குத்துச்சண்டை போட்டியில், காலால் உதைப்பதை தவிர, கைகளால் எதிராளி கீழே விழும் வரை தாக்கலாம். காலனி ஆதிக்கத்தின் அடக்குமுறையை நினைவு கூரும் வகையில் இந்த குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கருத்துகள் இல்லை