Header Ads

  • BREAKING



    ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் மீது இரும்பு ரயில் பாலம்.


    ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் மீது கட்டப்படும் மிக உயர்ந்த பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. உதம்புரில் இருந்து பாரமுல்லாவை இணைக்கும் வகையில் செனாப் நதியின் மீது சுமார் ஆயிரத்து 178 அடி உயரத்தில் இந்த இரும்புப் பாலம் கட்டப்படுகிறது. கட்டி முடிக்கப்பட்ட பின்னர் உலகின் மிக உயரத்தில் இருக்கும் வளைவு ரயில் பாலம் என்ற பெருமையைப் பெறும்.வரும் 2019ம் ஆண்டு இந்தப் பாலம் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொங்கண் ரயில்வே இந்த பாலத்தை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த ரயில்பாதையின் மிகப்பெரிய சவாலாக கருதப்படுவது மலைகளைக் குடைந்து கட்டப்படும் குகைகள் மற்றும் துணைப்பாலங்கள் தாம். இதற்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கியுள்ளன.சுமார் 63 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த குகைகள் வழியாக ரயில்கள் பயணிக்கும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad