ரயில் டிக்கெட்டை வீட்டுக்கே கொண்டுவந்து தரும் புதிய முறை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம்.
முன்பதிவு ரயில் டிக்கெட்டை வீட்டுக்கே கொண்டு வந்து தரும் புதிய முறையை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்துள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களிலும், இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போதும், பணம் செலுத்துவதிலும் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளை வீட்டுக்குக் கொண்டு வந்து தரவும், டிக்கெட் கையில் கிடைத்ததும் பணம் செலுத்தும் முறையையும் ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்துள்ளது. வீட்டுக்குக் கொண்டுவரப்படும் ரயில் டிக்கெட்டை வாங்கும்போது ஆதார் அல்லது பான் கார்டு எண்ணை சமர்பிக்க வேண்டும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவுறுத்தியுள்ளது. 5 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 90 ரூபாயும், அதற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு 120 ரூபாயும் விற்பனை வரியுடன் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை