Header Ads

  • சற்று முன்



    போக்குவரத்து தொழிலாளர்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.


    தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தவிர்க்கச் செய்ய, இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு போக்குவரத்து துறை தொழிலாளர்கள், தங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்கக் கோரி, பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் யாசின் பேகம் தலைமையில் நடைபெற்ற 4 மணி நேரப் பேச்சுவார்த்தையில், தொழிலாளர் தரப்பில் 7 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதற்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவித்திருந்த 750 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்ற பதிலே மீண்டும் தெரிவிக்கப்பட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. இதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவே பேச்சுவார்த்தைத் தொடங்கியது. தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் யாசின் பேகம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகளும், 47 தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை, போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad