Header Ads

  • சற்று முன்



    போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் தமிழக அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை.


    கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
    தமிழ்நாடு போக்குவரத்து துறை தொழிலாளர்கள், தங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு, போக்குவரத்து கழக நிர்வாகங்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இது தொடர்பாக நேற்று முன்தினம் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவேண்டும் எனவும், அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
    ஆனால், தொழிற்சங்கங்கள் இதை ஏற்க மறுத்ததால், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் யாசின் பேகம் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், 47 போக்குவரத்து தொழிலாளர் நல சங்கங்கள், போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர்கள் 8 பேர் கலந்துகொண்டனர்.
    4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஓய்வூதிய நிலுவைத் தொகை 1,700 கோடி ரூபாய், பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள வருங்கால வைப்பு நிதி, எல்.ஐ.சி காப்பீடு உள்ளிட்ட 4,500 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகள் தொழிலாளர் தரப்பில் முன் வைக்கப்பட்டன. இதற்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவித்திருந்த 750 கோடி ரூபாய் என்ற பதிலே மீண்டும் தெரிவிக்கப்பட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. எனினும், இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும், சமரசத்துக்கு இடமில்லை எனவும் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad