Header Ads

  • BREAKING



    போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கை தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை.



    தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ள நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள், தங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. இதையடுத்து, நேற்று மீண்டும் தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் யாசின் பேகம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகளும், தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படாததால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    நேற்று மாலை போக்குவரத்துத் துறை அமைச்சருடன் சென்று முதலமைச்சரை சந்தித்ததாக செய்தியாளர்களிடையே பேசிய அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் சின்னசாமி தெரிவித்தார்.
    இதனிடையே, 2 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்றால் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் உறுதியாக நடைபெறும் என்றும் தொமுச செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad