Header Ads

  • BREAKING



    போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.


    போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
    சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு முழுவதும் முன்பதிவற்ற பெட்டிகளுடன் கூடிய ரயில் 15-ம் தேதியும் 19-ம் தேதியும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை வழியாக இரவு எட்டு மணிக்கு நெல்லையை அடையும். இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு மற்றொரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நெல்லையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் இரவு 10 மணி 10 நிமிடத்துக்கு முன்பதிவற்ற ரயில் இயக்கப்படும்.
    சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு முழுவதும் முன்பதிவற்ற பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளது.‌ செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிக்கு சென்ட்ரலில் புறப்படும் இந்த ரயில் காட்பாடி, ஈரோடு வழியாக கோவையை மாலை 4 மணி 15 நிமிடத்துக்கு சென்றடையும். எனினும் இதில் ஒரு விதிவிலக்காக நாளை ஒரு திங்கள் கிழமையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அடுத்து வரும் திங்கள் கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இது தவிர மற்றொரு சிறப்பு ரயில் இரவு எட்டு முப்பதுக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு காலை 5 மணிக்கு கோவையை அடையும். சென்னை எழும்பூரில் இருந்து திருவாரூருக்கு சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படும். எழும்பூரில் காலை 8 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் இரண்டரை மணிக்கு இந்த ரயில் திருவாரூரை அடையும். மறுமார்க்கத்தில் திருவாரூரில் மாலை மூன்று முப்பத்து ஐந்து மணிக்கு புறப்பட்டு இரவு பத்து பதினைந்து மணிக்கு இந்த ரயில் எழும்பூரை அடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad