Header Ads

  • சற்று முன்



    நிறுத்திவைக்கப்பட்ட டிராவல்ஸ் பேருந்துகளில் திடீர் தீவிபத்து.


    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே, தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 10 பேருந்துகள் தீப்பிடித்து சேதமடைந்தன. சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பழத்தோட்டம் சாலை பகுதியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில், பர்மிட் ரத்து செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்று இரவு ஒரு பேருந்தில் பற்றிய கொளுந்துவிட்டு எரிந்தது. சற்று நேரத்தில் மற்ற பேருந்துகளுக்கும் தீ பரவியதால் அப்பகுதியே தீ மண்டலமாகக் காட்சியளித்தது.
    அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் 4 வாகனங்களில் வந்த 30 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அணைக்கப்பட்ட பிறகு பேருந்துகள் முற்றிலும் நாசம் அடைந்து எலும்புக் கூடாய் காட்சி அளித்தன.
    அப்பகுதியில் குப்பைகளை எரிக்கும் போது வெளியேறிய நெருப்புப் பொறி, பேருந்துகளின் மீது பட்டுத் தீப்பற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad