Header Ads

  • BREAKING



    எஃப்பிஐ இயக்குனரை அதிரடியாக நீக்கினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.


    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐயின் ((FBI)) இயக்குனரை பதவியில் இருந்து நீக்கி உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை மாற்ற ரஷ்யா முயற்சி மேற்கொண்ட பிரச்சினையை எஃப்பிஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமே சரியாக கையாளத் தவறிவிட்டதாக, ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஜேம்ஸ் கோமே தனது நம்பகத் தன்மையை இழந்துவிட்டதால் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவரது பதவி உடனடியாக பறிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார். ஜேம்ஸ் கோமே எஃப்பிஐ அதிகாரிகளிடையே மேடையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனிடையே, புதிய எஃப்பிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்கான பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad