அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேச்சு.
சிரியாவில் தொடரும் நெருக்கடி நிலை குறித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சிரியாவின் இட்லிப் நகரில் அந்நாட்டு அரசுப் படைகள் நடத்திய ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் பிஞ்சுக் குழந்தைகள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, சிரியாவின் விமானப் படைத் தளம், விமான ஓடுதளம் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணைகளை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை வீழ்த்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், சிரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் தொடரும் நெருக்கடி நிலை குறித்து, அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் உரையாடியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை