Header Ads

  • சற்று முன்



    டிடிவி தினகரனை மே-15 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு.


    5 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்த நிலையில், டி.டி.வி.தினகரனை மே 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலைச்சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு இடைத்தரகர் சுகேஷ் மூலம் 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாக கூறி, டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் கடந்த 25-ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட தினகரனை, 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்துவந்து, இரண்டு நாட்கள் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மீண்டும் டிடிவி தினகரனை டெல்லிக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவருடைய வங்கிக் கணக்குகளில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, டெல்லி போலீசார், டி.டி.வி. தினகரனை டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தினகரனுக்கு ஜாமீன் வழங்க, போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் மே 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரையும் திஹார் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, டெல்லி போலீசாருக்கு தேவை இருப்பின் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை செய்யலாம் என அனுமதி அளித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad