Header Ads

  • BREAKING



    இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் டி.டி.வி.தினகரன்.



    தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன், 5 நாள் போலீஸ் விசாரணைக்குப் பிறகு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், டி.டி.வி.தினகரனை கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்த பின்னர், சென்னைக்கு அழைத்துவந்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார், இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். முதல்நாளில் டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்திற்கு கொண்டுசென்றும், 2ஆவது நாளில் ஆதம்பாக்கம், கொளப்பாக்கம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, டி.டி.வி.தினகரனை மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவருடைய 5 வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைய உள்ளதை அடுத்து, டெல்லி போலீசார், டி.டி.வி. தினகரனை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad