Header Ads

  • BREAKING



    டிடிவி தினகரனை அன்னிய செலவாணி வழக்கில் ஜூன் 8-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.



    டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரனை அன்னிய செலவாணி மோசடி வழக்கில் ஜூன் 8-ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிடிவி தினகரன் மீதான 2 அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் விசாரணை இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் 2-வது நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்த அனைத்து விவரங்களையும் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
    இதையடுத்து அந்நிய செலாவணி மோசடி வழக்குகளின் விசாரணைக்காக அடுத்த மாதம் 8-ம்தேதி டிடிவி தினகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை கொடுத்து, திகார் சிறையில் இருந்து தினகரனை அழைத்து வந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஆணையிடட்ர். முன்னதாக வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சாதிக் முகமது ஆஜராகி இருந்தார். இந்த வழக்குகள் விசாரணை வரும் போதெல்லாம் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் அவரிடம் நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad