Header Ads

  • BREAKING



    துருக்கி அதிபர் எர்டோகன் மனைவியுடன் டெல்லி வருகை.


    துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக டெல்லி வந்துள்ளார். பாலம் விமான நிலையத்தில் அவரையும், மனைவி எமினி எர்டோகனையும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அணுசக்தி விநியோகிக்கும் குழுவான என்.எஸ்.ஜியில் உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற முயற்சித்து வரும் நிலையில் இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கி நாட்டின் அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தீவிரவாதம், இருநாட்டு வர்த்தகம் உள்பட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் எர்டோகன் இன்று பேச்சு நடத்துகிறார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad