Header Ads

  • BREAKING



    லஞ்சப் புகார் பரபரப்பைத் தொடர்ந்து முதல்முறையாக கெஜ்ரிவால் ட்விட்டரில் கருத்து.


    இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தன் மீது குற்றச்சாட்டு சுமர்த்தப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளிக்கப் போவதாக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 400 கோடி ரூபாய் வாட்டர் டேங்க் ஊழல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவது குறித்து, அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடமிருந்து அர்விந்த் கெஜ்ரிவால், 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கபில் மிஸ்ரா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அவர் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், வாய்மையே வெல்லும் என்றும், இன்று நடைபெறும் டெல்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இதற்கு பதில் கிடைக்கும் என்றும் செய்தியை வெளியிட்டுள்ளார். இதனிடையே, லஞ்சம் பெற்ற அர்விந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்குமாறு, டெல்லி லோக் ஆயுக்தா அமைப்பிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை சந்தித்த பாஜகவினர், லஞ்சம் கொடுத்த அமைச்சர் சத்யேந்திர ஜெயினை, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad