Header Ads

  • BREAKING



    இரண்டு சிபிஐ ரெயிடுகளும் -- ஒரு குற்றச்சாட்டும்.!!!


    (மே 16, 2017)  நேற்றைய தினம் ரெய்டுகள் தினம்.
    மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி இதை ” day of reckoning ” என்று வர்ணித்திருக்கிறார். ( Oxford meaning – the time when past mistakes or misdeeds must be punished or paid for… )
    ஒருவர் முன்னாள் பீஹார் முதல்வர்/முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சர் – சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் அல்லது தகாத வழியில் பணம்/சொத்து பண்ணி இருப்பதாகப் புகார்.
    இன்னொருவர் முன்னாள் நிதியமைச்சரின் மகன் – தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி, தவறான வழியில் பணம் பண்ணி இருப்பதாக புகார்.
    நம்மை போன்ற வெளிநபர்களுக்கு இது குறித்து ஏற்கெனவே தெரிந்தது என்ன…?
    முதலாவது நபர் – ஊரறிந்த கொள்ளைக்காரர், மாட்டுத்தீவனத்தில் கூட கொள்ளையடித்து சிறைத்தண்டனை பெற்றவர்.
    இவரது விசேஷ குணாதிசயம் – வெட்கங்கெட்டவர். எவ்வளவு அவமானம் வந்தாலும் துடைத்து விட்டுப் போய்க்கொண்டே இருப்பவர்.

    இரண்டாமவர் – முதல்வரைப் போல அல்ல. உணர்வு பூர்வமானவர். ஆனால், இவரைக் குறித்த நிறைய புகார்கள் நீண்டகாலமாக விசாரணையில் இருந்து வந்தன.
    ஆனால், இந்த ரெய்டுக்கு எதிராக இரண்டு தரப்புமே ஒரே வாதத்தை முன்வைக்கின்றன.
    “பாஜக அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறது. பயமுறுத்த முயற்சிக்கிறது. அரசை எதிர்த்து குரல் கொடுப்பதால் – அடக்க நினைக்கிறது. விசாரணை ஏஜென்சிக்களை தவறாக பயன்படுத்துகிறது.”
    குறைந்த பட்சம் இந்த இரண்டு விவகாரங்களிலும் பொது மக்கள் அப்படி நினைக்கவில்லை.
    இரண்டிலுமே ” நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம் …? ” என்பது தான் பொதுமக்களின் கேள்வியாக இருந்தது…!!!
    நடவடிக்கைக்கு உள்ளானவர்களின் கேள்விகளின் பின்னணியில் பழைய அனுபவங்கள் இருக்கின்றன. சாதாரணமாக சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை ஆகியவை ரெய்டுகள் நிகழ்த்தும்போது, பரபரப்பை கிளப்பினாலும் –
    அதன் பின் அந்த விவகாரங்கள் ” கிணற்றில் போட்ட கல்”லாகி விடுகின்றன. அநேக ரெய்டுகளின் பின்னால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதாக தெரிவதில்லை.
    எனவே, குறைந்த பட்சம் இப்போதாவது இவர்கள் எழுப்பும் பழிவாங்கல் குறித்த புகார்களையாவது, கண்டுகொள்ளாமல் போவதை விடுத்து –
    என்ன காரணத்திற்காக, எதை எதிர்பார்த்து ரெய்டுகள் நிகழ்த்தப்பட்டன. அதன் விளைவாக என்ன ஆவணங்கள், ஆதாரங்கள் கிடைத்தன, கைப்பற்றப்பட்டன -என்று மத்திய அரசு / சம்பந்தப்பட்ட இலாகாக்கள் –
    – விளக்கமாக ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டால், அரசின் பக்கம் உள்ள நியாயம் பொதுமக்களுக்கு விளங்கும், இத்தகைய நடவடிக்கைகளின் பின்னாலுள்ள விவகாரங்கள் பொதுவெளிக்கு வரும் ; சம்பந்தப்பட்டவர்கள் ” பழி வாங்கப்படும் பலியாடுகள் /அப்பாவிகள் (victim ) ” என்கிற வேடம் கலைக்கப்படும்.
             
                                                                                                                        BY: காவிரி மைந்தன்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad