Header Ads

  • BREAKING



    இருசக்கர வாகன விற்பனை சந்தையில் உலக அளவில் இந்தியா முதலிடம்.


    இருசக்கர வாகனங்கள் விற்பனையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலக அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனை குறைந்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஒரு கோடியே 70 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதே ஆண்டில் சீனாவில் ஒரு கோடியே 60 லட்சம் இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விலை குறைந்த கார்களின் வரவு, இருசக்கர வாகனங்கள் மீதான சீன அரசின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் அந்நாட்டின் இருசக்கர வாகன சந்தை வீழ்ச்சியை சந்தித்து, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad