உத்திரபிரதேச மாநிலத்தில் எருமை மாட்டை வெட்டியவருக்கு அடி, உதை.
உத்திரபிரதேச மாநிலத்தில் எருமை மாடு ஒன்றை வெட்டியவர் மீது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அலிகார் மாவட்டம் அசல் தல் ((Achal Tal)) பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. காளி பாகே ((Kali Baghe)) என்ற நபர், தனது வீட்டில் எருமை மாடு ஒன்றை வெட்டியதை அறிந்த சிலர் அவரது வீட்டிற்குச் சென்று கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், காளி பாகே-வை தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக மீட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக ஐந்து இளைஞர்களைக் கைது செய்துள்ள போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை