உ.பி.யில் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வேகமாகப் பரவிய தீயை கட்டுப்படுத்த முடியாத தீயணைப்பு வீரர்கள் கூடுதலான தீயணைப்பு வாகனங்களை கோரினர். இதையடுத்து 12 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தீ விபத்தால் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்தை போலீசார் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை