யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியை தகுதியிழப்புச் செய்க: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு.
உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோரைத் தகுதியிழப்புச் செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநலமனு விவகாரத்தில் இந்திய அட்டர்னி ஜெனரலுக்கு விளக்கம் கேட்டு அலஹாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சஞ்சய் சர்மா என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுதிர் அகர்வால், விரேந்திர குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்திய அட்டர்னி ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை மே 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்த பொதுநல மனுவில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் யோகி மற்றும் துணை முதல்வர் கேஷவ் பிரசாத் ஆகியோர் எம்.பி.க்களாக நீடிப்பதால் அரசியல் சட்டம் 101(2) பிரிவின் கீழ் மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி வகிக்க முடியாது. ஆகவே இருவரது பதவியையும் செல்லுபடியாகாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மத்திய சட்டம் ஒன்றின் அரசமைப்புத் தன்மையை அட்டர்னி ஜெனரல் வாதத்தை கேட்காமல் முடிவெடுக்க முடியாது என்பதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை