Header Ads

  • BREAKING



    உப்பூர் அனல்மின் நிலையத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை.


    ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல்மின் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உப்பூரில் இரண்டு 800 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக, திரிப்பலாங்குடி, விளமாவூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 544 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து கார்த்திகேயன் உள்ளிட்ட 135 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக 8 வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தார். வழக்கு விசாரணை ஜுன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad