இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை கொரிய கடற்பகுதிக்குக் கொண்டு சென்றது அமெரிக்கா.
அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை கொரிய கடற்பகுதிக்குக் கொண்டுசென்றுள்ளது. ஏற்கனவே கால்-வின்சன் ((Carl Vinson)) என்ற கப்பல் கொரிய கடற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது ரொனால்ட் ரீகன் ((Ronald Reagan)) என்ற கப்பல் அங்கு சென்றுள்ளது.
60 போர்விமானங்களைத் தாங்கும் வல்லமை பெற்ற இந்த மிகப்பெரிய கப்பலில் நான்காயிரத்து 539 பேர் பணியில் இருப்பார்கள். விரைவில் இரண்டு கப்பல்களில் இருந்தும் போர் விமானங்களைச் செலுத்துவது, மீண்டும் கப்பலில் இறக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமெரிக்க கடற்படை அதிகாரி சார்ல்ஸ் வில்லியம்ஸ் ((Charles Williams)) தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆறாவது அதி நவீன அணு ஆயுத ஏவுகணைச் சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ள நிலையில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் கொரிய கடல் பகுதியில் போர்விமானப் பயிற்சியில் ஈடுபடப்போவது கவனம் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை