Header Ads

  • BREAKING



    தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது: மாநகராட்சி.



    சென்னை வடபழனியில் தீவிபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு, விதிகளை மீறி கட்டப்பட்டது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இரு குழந்தைகள் உள்பட 4 பேரின் உயிரைக் குடித்த தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்திற்கு சொந்தக்காரர் அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் சங்கத்தின் பகுதி செயலாளரும், திநகர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ள விஜயகுமார் என்பவர் தான். 15ஆண்டுகளுக்கு முன்னர் பெருமாள் கோயில் தெருவில் 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை அவர் கட்டியுள்ளார். இந்தக் கட்டிடம் எந்த வித திட்ட அனுமதியும் இல்லாமல் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதாக அப்போது புகார் எழுந்த போது மாநகாட்சி கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு இந்த கட்டிடத்திற்கு சீல் வைக்குமாறு சி.எம்.டி.ஏ. தரப்பில் இருந்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் மாநகராட்சியின் மவுனம் நீடித்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் கடிந்து கொண்ட பின்னர், கடந்த ஆண்டில் அந்த கட்டிடத்தில் தங்கி இருந்தோருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. ஆனால் உரிமையாளர் விஜயகுமார் நீதிமன்றம் சென்றதையடுத்து சீல் நீக்கப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தற்போது தீவிபத்து ஏற்பட்டு உயிர் பலி நிகழ்ந்துள்ளது.
    கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விட்டால், உரிய முறையில் கட்டப்பட்டு இருக்கிறதா? பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா? என்று சோதனை செய்ய வேண்டியது மாநகராட்சியின் பொறுப்பு. ஆனால் பல தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட போது அப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்காமல், தற்போது மட்டும் விதிமீறல் கட்டிடம் என்று அறிவிப்பது அதிகாரிகள் தப்பித்துக் கொள்வதற்கான வியூகம் என்று தான் நினைக்க தோன்றுகிறது. இதுமட்டும் அல்லாமல் சென்னையில் பல இடங்களில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்களுக்கு மேல் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு கொண்டே இருக்கின்றன. இவற்றை மாநகராட்சி உரிய முறையில் சோதனையிடுகிறதா? மாநகராட்சி இதனை கண்டு கொள்கிறதா? நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? எனப் பல கேள்விகள் எழுகின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad